செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக தமிழ்நாட்டில் தியேட்டர்களை மூடி நான்கு மாதங்களாகிறது. இதனிடையே, தமிழ்நாட்டில் வியாபாரம் நடக்கும் இடங்கள், கோயில்கள் உள்ளிட்ட சில இடங்களில் அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் தியேட்டர்களைத் திறக்க இன்னும் சில வாரங்கள் வெளியாகலாம் எனத் தெரிகிறது.
இதனிடையே, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் இன்று ஆன்லைன் மீட்டிங் ஒன்றை நடத்தியுள்ளனர். அதில் தியேட்டர்கள் திறப்பு, தயாரிப்பாளர் சங்கம் கேட்கும் கோரிக்கைகள், ஓடிடி தளங்களால் வரும் பாதிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் காரசாரமாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
தயாரிப்பாளர் சங்கம் கேட்டுள்ள சில கோரிக்களை நிறைவேற்ற முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது. அதில் தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்கள் அனைத்தையும் இந்த வருடத்திற்குள் கம்ப்யூட்டர் மயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம். டிக்கெட் விற்பனையில் உண்மைத் தகவல்களை தியேட்டர்காரர்கள் தருவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது. அதைச் சரிக்கட்டவே, இந்த கம்ப்யூட்டர் மயமாக்கல் என்கிறார்கள்.
ஆனாலும், இன்றைய ஓடிடி யுகத்தில் தியேட்டர் தொழிலைக் காப்பாற்ற டிக்கெட் கட்டணக் குறைப்பு, உணவுப் பண்டங்கள் விலை குறைப்பு, பார்க்கிட் கட்டணக் குறைப்பு இவற்றைச் செய்ய வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
நல்ல படங்களை தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் உருவாக்கினால் தியேட்டர்களைத் தேடி மக்கள் வருவார்கள் என்பதும் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
விரைவில் கூட்ட முடிவுகள் என்னென்பது வெளியாகும்.