துல்கர் சல்மான் படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன் | வதந்தி 2 வெப்சீரிஸில் இரண்டு நாயகிகள் | தர்பார் தோல்வி குறித்து ஓபன் ஆக பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் | தமிழில் ரீமேக் ஆகும் கன்னட படம் 'சூ ப்ரம் சோ' | சர்ச்சில் ரொமான்ஸ்: ஜான்வி கபூர் படத்திற்கு எதிர்ப்பு | பிளாஷ்பேக்: ரீ என்ட்ரி வாய்ப்புகளை மறுத்த சுவலட்சுமி | ‛கேங்ஸ்டர்' ஆக ‛லெஜண்ட்' சரவணன் | ஆண்ட்ரியா படத்தை பார்க்க நீதிபதிகள் முடிவு | சர்தார் 2 படத்தில் உள்ள சிக்கல் | பிளாஷ்பேக்: எழுத்தாளருக்கான தேசிய விருது பெற்ற முதல் நடிகை |
நடிகர்கள் மட்டுமல்ல நடிகைகளும் இடைவிடாமல் உடற்பயிற்சி செய்து தங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்து வருகிறார்கள். நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, ராஷி கண்ணா இருவரும் ஒரே ஜிம்மில் தான் பயிற்சி பெற்று வருகிறார்கள். ஒரே நேரத்தில் இருவரும் ஜிம்மிற்கு வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது. ராஷ்மிகா, ராஷி கண்ணா இருவரும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் பிரபலமாகிவிட்டார்கள்.
இந்தக் காலத்தில் நடிகைகளுக்குள் எந்த போட்டியும், பொறாமையும் இருப்பதில்லை. அனைவரும் நட்பாகவே பழகி வருகிறார்கள். ராஷ்மிகா, ராஷி இருவரும் ஒன்றாக இருக்கும் அந்த புகைப்படத்தைப் பார்த்தால் அது நன்றாகவே தெரியும்.
ராஷி கண்ணா தற்போது தமிழில் 'அரண்மனை 3, துக்ளக் தர்பார்' மற்றும் மூன்று புதிய படங்களிலும் நடித்து வருகிறார். ராஷ்மிகா தெலுங்கில் இரண்டு படங்கள், ஹிந்தியில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். 'சுல்தான்' படத்திற்குப் பிறகு தமிழில் புதிய படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.