தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
அண்ணாத்த, நெற்றிக்கண் ஆகிய படங்களில் நடித்துவிட்ட நயன்தாரா தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார். இந்தநிலையில் அவர் நடித்துள்ள நெற்றிக்கண் படம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. மேலும், தான் நடிக்கும் படங்களின் ஆடியோ விழா மற்றும் மீடியா பிரமோஷன்களில் கலந்து கொள்ளாத நயன்தாரா, பத்திரிகை மற்றும் மீடியா பேட்டிகளையும் தொடர்ந்து தவிர்த்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது அவரை விஜய் டிவிக்காக ஒரு பேட்டி எடுத்துள்ளார் திவ்யதர்ஷினி. இந்த பேட்டி ஆகஸ்ட் 15-ந்தேதி ஒளிபரப்பாக உள்ளது. அந்த பேட்டியின் பிரமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அதில், தனக்கும் டைரக்டர் விக்னேஷ் சிவனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று விட்டதை உறுதிபடுத்தியுள்ள நயன்தாரா, விக்னேஷ்சிவனிடம் அனைத்து விசயங்களுமே தனக்கு பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
நானும் ரவுடி தான் படத்தில் இருந்தே நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதலித்து வருகின்றனர். இருவரும் திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். அவ்வப்போது நெருக்கமாக எடுத்த செல்பி போட்டோக்களை பதிவிட்டும் வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் விக்னேஷ் சிவன், நயன்தாரா கொச்சி சென்றபோது அங்கு நிச்சயதார்த்தம் எளிய முறையில் நடந்ததாக கூறப்படுகிறது. விரைவில் இருவரும் திருமணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.