மீண்டும் தமிழ் படங்களில் கவனம் செலுத்தும் ரோஜா | சம்பளத்தை உயர்த்தினாரா ராஷ்மிகா மந்தனா | விஷால், சுந்தர். சி கூட்டணியின் 3வது படம்: கயாடு லோஹர் ஹீரோயின்? | உண்மையில் ஜனநாயகன், 'பகவந்த் கேசரி' ரீமேக்கா? | சரவண விக்ரம் ஹீரோவான முதல் படத்திலேயே ஹாட் முத்தக்காட்சிகள் | பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' என்ன மாதிரியான கதை? | ஐசியூவில் இயக்குனர் பாரதிராஜா: இப்போது அவர் உடல் எப்படி இருக்கிறது? | 2026 ஆரம்பமே அமர்க்களம் : முதல் வாரத்தில் 6 படங்கள் ரிலீஸ் | குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் 'கிகி & கொகொ' | அறிமுகப் படத்திலேயே 1000 கோடி, அதிர்ஷ்ட ஹீரோயினாக மாறிய சாரா |

தொகுப்பாளினியான அர்ச்சனா, பிக்பாஸ்-4 நிகழ்ச்சிக்குப் பிறகு பெரிய அளவில் பிரபலமாகி விட்டார். சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். சமீபத்தில் அர்ச்சனாவுக்கு மூளை அருகே ஒரு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதையடுத்து வீடு திரும்பியவர் தற்போது ஓய்வெடுத்து வருகிறார்.
இந்நிலையில் தனது உடல்நிலை குறித்து தற்போது ஒருதகவல் வெளியிட்டுள்ளார் அர்ச்சனா. அதில், மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு 10 நாட்களுக்கு பிறகு தான் வீடு திரும்பினேன். எனது மூக்கு வழியாகத்தான ஆபரேசன் நடைபெற்றது. அதனால் பழைய குரல் இன்னும் வரவில்லை. அது வெயிட் குறந்து விட்டேன். தற்போது மீட்புக்கான கடின பாதையில் இருக்கிறேன்.
வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள் என்று சொல்வார்கள். ஆனால் நான் அதை மாற்ற விரும்புகிறேன், இன்றே முழுமையாக வாழுங்கள், ஏனென்றால் நாளை இருக்குமா என்று உங்களுக்குத்தெரியாதுஎன்று தெரிவித்துள்ள அர்ச்சனா, 24 மணி நேரமுக் கண் தூங்காமல் தன்னை கவனித்துக்கொண்ட நர்ஸ்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார். அதோடு நான் பழைய நிலைக்கு திரும்ப இன்னும் சில வாரங்கள் ஆகும் என்று நினைக்கிறேன். அதன்பிறகு வழக்கம் போல் மீடியா பணிகளுக்கு திரும்பி விடுவேன் என்று தெரிவித்துள்ளார்.