பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் |

நட்டி நடிக்கும் சைக்கோ திரில்லர் படத்தை புதுமுக இயக்குனர் ஹாரூன் இயக்குகிறார். வேலன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.எம். முனிவேலன் தயாரிக்கிறார். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. இதன் படப்பிடிப்புகள் சென்னையை சுற்றி உள்ள பகுதியில் மும்முரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் காளி மற்றும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படங்களில் நாயகியாக நடித்த ஷில்பா மஞ்சுநாத் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் முக்கிய வேடங்களில் பிளாக் ஷீப் நந்தினி, பாரதா நாயுடு மற்றும் ப்ரீத்தி ஆகியோர் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்கு கார்த்திக் ராஜா இசை அமைக்கிறார். கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்கிறார்.