இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
நடிகை நமீதாவுக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்து வெகு காலமாகி விட்டது. தற்போது அவர் பாவ் பாவ் என்ற பெயரில் சொந்த படம் தயாரித்து அதில் நடித்து வருகிறார். இந்த நிலையில் விரைவில் நமீதா சீரியலுக்கு வருகிறார்.
நமீதாவுக்கு சின்னத்திரை புதிதில்லை. மானாட மயிலாட நிகழ்ச்சியில் மார்க் போட்டார். அதன்பிறகு டான்ஸ் ஜோடி டான்சில் நடுவராக இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். தற்போது சீரியலிலும் நடிக்க இருக்கிறார்.
இதற்கு முன்னோட்டமாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் புதுபுது அர்த்தங்கள் சீரியலில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். தேவ்யானி, அபிஷேக், திண்டுக்கல் லியோனி மற்றும் பலர் நடித்து வரும் சீரியல் இது.
இதில் நமீதா நடிகை நமீதாவாகவே நடித்துள்ளார். காரில் வரும் நமீதா, வழியில் திறந்து கிடக்கும் கழிவுநீர் கால்வாயை பார்க்கிறார். அதை பார்த்துவிட்டு, யாருக்குமே சமூக பொறுப்பு இல்லை. அனைவரும் இதை கடந்து செல்கின்றனர் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார். அப்போது தேவயானியின் மருமகள் அதை எடுத்து மூடுகிறார். நடிகை நமீதா அதை பாராட்டுகிறார். இந்த காட்சி சீரியலின் புரமோவில் இடம்பெற்றுள்ளது.
நமீதா விரைவில் ஒரு புதிய தொடரில் டைட்டில் ரோலில் நடிக்க இருக்கிறார். இதற்கான பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது. விரைவில் முறையான அறிவிப்பு வரும்.