தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக ஏப்ரல் மாதக் கடைசியில் தமிழகத்தில் உள்ள அனைத்து சினிமா தியேட்டர்களும் மூடப்பட்டன. ஏறக்குறைய நான்கு மாதங்களாக திறக்கப்படாமல் உள்ள சினிமா தியேட்டர்களை செப்டம்பர் மாதத்திலாவது திறக்க அனுமதிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு திரையுலகத்தினரிடம் எழுந்துள்ளது.
நமது பக்கத்து மாநிலமான கேரளாவிலும் இன்னும் தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. மற்ற தென்னிந்திய மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகாவில் 50 சதவீத இருக்கைகளுடனும், தெலங்கானாவில் 100 சதவீத இருக்கைகளுடனும், யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் 50 சதவீத இருக்கைகளுடனும் தியேட்டர்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
தமிழில் தயாராகியுள்ள பல படங்களின் வேலைகள் முடிந்து தியேட்டர்கள் திறப்பிற்காகக் காத்திருக்கின்றன. மேலும், தெலுங்கு, கன்னடத்தில் தயாராகியுள்ள சில பான்-இந்தியா படங்களையும் வெளியிடத் தயாராக உள்ளார்கள். ஆனால், தென்னிந்தியாவிலேயே இன்னும் தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் தியேட்டர்கள் திறக்கப்படாத காரணத்தாலும், பாலிவுட்டின் முக்கிய வசூல் மாநிலமான மகாராஷ்டிராவிலும் இன்னும் தியேட்டர்கள் திறக்கப்படாத காரணத்தாலும் பலரும் தங்களது வெளியீட்டைப் பற்றி முடிவு செய்ய முடியாமல் தவித்து வருகிறார்கள்.
கேரளாவில் கொரோனாவின் தாக்கம் இன்னும் முழுமையாகக் குறையவில்லை. தமிழகத்தில் கட்டுக்குள்தான் இருக்கிறது. இருந்தாலும் தியேட்டர்களைத் திறந்தால் இன்னும் அதிகரிக்குமோ என்ற அச்சத்தில் தான் தியேட்டர்களைத் திறக்காமல் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
தியேட்டர்கள் திறக்கப்பட்ட ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களிலும் எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் தியேட்டர்களுக்கு வரவில்லையாம். கொரோனாவின் பிடியிலிருந்து மக்கள் முழுவதுமாக மீண்ட பிறகு தான் தியேட்டர்களையும், சினிமா துறையையும் பழையபடி மீட்டெடுக்க முடியும். அதுவரையில் கடும் சிரமங்களுக்கு ஆளாக வேண்டியிருக்கும் என திரையுலகினர் மிகவும் வருத்தத்தில் உள்ளார்கள்.