பிளாஷ்பேக்: 65 ஆண்டுகளுக்கு பிறகு கதை புகாரில் சிக்கிய 'மருதநாட்டு இளவரசி' | சினிமாவுக்கு வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணன் | பெய்டு வியூஸ் - 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜு அதிரடி அறிவிப்பு | தனுஷிற்கு ஹிந்தி தெரியுமா... தெரியாதா...? | மணிரத்னத்தை விமர்சிப்பதா ? தெலுங்கு இயக்குனர் காட்டம் | அஜித், ஆதிக் காம்போ உறுதி | கவின் நடித்துள்ள 'கிஸ்' படத்தின் சிங்கிள் பாடல் வெளியானது! | 'லியோ' படத்தில் உயிரிழந்த மடோனாவின் கேரக்டர் 'பென்ஸ்' படத்தில் உயிர் பெறுகிறதா? | சூர்யா 46வது படத்தின் பாடல் பயங்கரமாக வந்திருக்கு! - ஜி.வி.பிரகாஷ் குமார் வெளியிட்ட தகவல் | சிவராஜ்குமாருக்கு நான் சித்தப்பா மாதிரி! கமல்ஹாசன் வெளியிட்ட வீடியோ |
மாஸ்டர் படத்தை அடுத்து தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் விஜய். அவருடன் பூஜா ஹெக்டே, டைரக்டர் செல்வராகவன், யோகி பாபு உள்பட பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து ஆக்சன் காட்சிகளை படமாக்க வெளிநாடு செல்ல திட்டமிட்டு உள்ளார் நெல்சன்.
இந்நிலையில் தற்போது பீஸ்ட் படத்தில் டைரக்டர் மிஷ்கின் வில்லனாக நடிக்க இருந்ததாக செய்தி வெளியாகி உள்ளது. அதாவது இந்த படத்தில் முக்கிய வில்லனாக நடிக்க மிஷ்கினைத் தான் அழைத்தாராம் விஜய். முதலில் அதற்கு ஒத்துக் கொண்ட மிஷ்கின், அதையடுத்து தான் பிசாசு-2 படத்தை இயக்க வேண்டி இருந்ததால் தேதிகளை ஒதுக்க முடியாமல் விலகிக் கொண்டததாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்பிறகு தான் அந்த வேடத்திற்கு செல்வராகவன் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.