குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் 'கிகி & கொகொ' | அறிமுகப் படத்திலேயே 1000 கோடி, அதிர்ஷ்ட ஹீரோயினாக மாறிய சாரா | 'ஏஐ' மூலம் யார் வேண்டுமானாலும் வயலின் இசைக்கலாம்: ஏ ஆர் ரஹ்மான் | போட்டி ரிலீஸ் : பிரபாஸின் பெருந்தன்மை, ரசிகர்கள் பாராட்டு | விமான நிலையத்தில் தடுமாறி விழுந்த விஜய் | பிளாஷ் பேக் : இயக்கத்தில் தோற்ற யூகி சேது | பிளாஷ்பேக் : தோல்வி படத்தை வெற்றிப்படமாக்கிய மாடர்ன் தியேட்டர்ஸ் | படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! |

தெலுங்கில் ஆர்எக்ஸ்-100 என்ற படத்தில் நடித்து பிரபலமானவர் கார்த்திகேயா. அதன்பிறகும் ஹிப்பி, கேங்க்லீடர் என சில படங்களில் நடித்தவர் தற்போது ராஜா விக்ரமார்கா என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.
அதோடு, தமிழில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் வலிமை படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார் கார்த்திகேயா. இந்தநிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஐதராபாத் பெண் ஒருவருடன் கார்த்திகேயாவிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதில் இருவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.
இந்த தகவலை இன்னமும் கார்த்திகேயா அறிவிக்கவில்லை என்றாலும் நிச்சயதார்த்தம் நடைபெற்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.