ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

தமிழ், தெலுங்கில் பிரபல நடிகையாக இருப்பவர் அமலாபால். கடந்த 2014ல் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்தவர் பின்னர் அவரை பிரிந்தார். விவாகரத்துக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய அமலாபால், ஆடை என்ற படத்தில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது வெப்சீரிஸில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் அமலா தனது தம்பி உடனான கலாட்டாக்களை வீடியோக்களை அவ்வப்போது பகிர்வார். இப்போது தனது தம்பி அபிஜித்திற்கு திருமணம் நடந்துள்ளது. இதுதொடர்பான ஒரு வீடியோ தொகுப்பை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டிருக்கும் அமலாபால் தனது மகிழ்ச்சியையும், தம்பியின் திருமணத்திற்கு வாழ்த்தையும் தெரிவித்துள்ளார்.