ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

நடிகர் திலகம் சிவாஜி, நடிகையர் திலகம் சாவித்ரி ஆகியோர் அண்ணன், தங்கையாக நடித்த பாசமலர் படம்தான் இன்றைக்கும் அண்ணன், தங்கை பாசத்துக்கு உதாரணமாக சொல்லப்படும் படம். தற்போது சசிகுமார் அண்ணனாகவும், ஜோதிகா தங்கையாகவும் நடிக்கும் உடன்பிறப்பே படம் நவீன பாசமலர் என்கிறார் இயக்குனர் சரவணன். பத்திரிகையாளரான இவர் ஏற்வெனவே தஞ்சை விவசாய பிரச்சினையை மையமாக கொண்டு கத்துக்குட்டி என்ற படத்தை இயக்கியவர்.
உடன்பிறப்பே பற்றி அவர் மேலும் கூறியிருப்பதாவது: கத்துக்குட்டி படத்துக்கு பிறகு அடுத்த படம் கிடைக்கவில்லை. இந்த படத்தின் கதையோடு சில காலம் அலைந்தேன். கடைசியில் சூர்யா வீட்டு கதவு திறந்தது. சூர்யா சார் டீமில் அனைவருமே கதையை கேட்டுவிட்டு இது நவீன பாசமலர் என்றார்கள். நான் பத்திரிகையாளராக இருக்கும்போது ஜோதிகா எனக்கு அறிமுகம் என்பதால் அவரும் என்னை நம்பி படத்துக்குள் வந்தார். அவரின் 50வது படமாக இதில் நடிக்க முடிவெடுத்தார்.
முழுக்க முழுக்க தஞ்சாவூர் பெண்ணாக அவர் மாறி நடித்தார். பாசமும், கம்பீரமும் மிக்க பெண்ணாக படம் முழுக்க வலம் வருவார். யாருக்கும் எந்த கெடுதலும் நினைக்காத தூய மனிதராக சசிகுமார் நடித்திருக்கிறார். இவர் மாதிரி வாழணும் என்று நினைக்க வைக்கிற மாதிரியான கேரக்டர் அவருடையது. வேல்ராஜின் ஒளிப்பதிவும், இமானின் இசையும் படத்தை நல்லபடியாக உருவாக்க உதவியது.