மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் மனோஜ் பாஜ்பாய், பிரியா மணி, சமந்தா, தேவதர்ஷினி, உதய் மகேஷ், மைம் கோபி மற்றும் பலர் நடித்த வெப் சீரிஸ் ' த பேமிலி மேன் 2'. இலங்கைத் தமிழர்களையும், விடுதலைப் புலிகளையும் இந்த தொடரில் தவறாக சித்தரிக்கப்பட்டதாகக் கூறி கடும் சர்ச்சை எழுந்தது. தமிழக அரசும், சில பல கட்சிகளும், சில சினிமா பிரபலங்களம் இத்தொடருக்கு எதிராக குரல் கொடுத்தனர். தொடரில் நடித்த தமிழ் நட்சத்திரங்களைப் புறக்கணிக்க வேண்டும் என்ற குரலும் எழுந்தது.
பலத்த எதிர்ப்புக்கிடையில் அமேசான் ஓடிடி தளத்தில் இந்த வெப் தொடரை ஜுன் மாதம் 4ம் தேதி ஹிந்தியில் மட்டும் வெளியிட்டார்கள். அப்போதே தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இத்தொடரை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்படி வெளியிட்டிருந்தால் எதிர்ப்பாளர்களுக்கு எதிர்ப்பதற்கு இன்னும் வசதியாகப் போய்விடும் என்பதால் அதை தள்ளி வைத்துவிட்டார்கள் போலிருக்கிறது.
இப்போது தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிட்டுள்ளார்கள். அப்போது இந்த வெப் தொடர் பற்றி அதிகம் பகிராத சமந்தா, இன்று இந்த மூன்று மொழி வெளியீடு பற்றி மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.