சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

இயற்கை, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை உள்ளிட்ட படங்களை இயக்கியவர் எஸ்.பி.ஜனநாதன். கம்யூனிச சிந்தனைகளை படமாகி வந்த அவர் கடைசியாக விஜய் சேதுபதி , சுருதிஹாசன் நடிப்பில் லாபம் என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வந்தபோது திடீரென்று ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக எஸ்பி.ஜனநாதன் இறந்துவிட்டார்.
டி.இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை 7 ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் உடன் இணைந்து நடிகர் விஜய் சேதுபதி தயாரித்திருக்கிறார். லாக்டவுன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு இருந்ததால் இந்த படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டு விட்டதால் லாபம் படத்தை வருகிற செப்டம்பர் 9-ஆம் தேதி தியேட்டர்களில் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.