அப்பாவை அப்படி பார்த்தது மகிழ்ச்சி: கீர்த்திபாண்டியன் நெகிழ்ச்சி | கவிஞர்.நா.முத்துக்குமார் இசைச்கச்சேரி: கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் பங்கேற்பு | மணிரத்னத்தை மறுத்தாரா ரஜினி? | விரைவில் இயக்குனராகும் பார்த்திபன் மகன் ராதாகிருஷ்ணன் | தயாராகிறார் அடுத்த கேப்டன் | நட்பு வட்டார படங்களில் நடிப்பு: புலம்பும் நடிகை | கலையும் கருணையும்... அருண்மொழி தேவன் | நடிப்பு, பாட்மின்டன் ஸ்ரீசுவேதா-வின் விருப்பங்கள் | காதோடு தான் பேசுவேன்...! குரலுக்கு ஒரு கோபிகா | ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்த அபிஷன் ஜீவிந்த் |
ஸ்ருதிஹாசன் நடிப்பில் அடுத்ததாக விஜய்சேதுபதியுடன் நடித்துள்ள லாபம் படம் திரைக்கு வர இருக்கிறது. இந்தப் படத்திலேயே நாட்டுப்புற ஆடல் கலைஞராக நடித்துள்ளார் ஸ்ருதிஹாசன். அடுத்ததாக தற்போது பிரபாஸ் உடன் இணைந்து நடித்து வரும் சலார் படத்தில், இதுவரை தோன்றியிராத ஒரு புதிய கெட்டப்பில் நடித்திருக்கிறாராம். இந்த தகவலை அவரது ஒப்பனைக் கலைஞர் அம்ரிதா தனது சோசியல் மீடியா பக்கத்தில் கூறியுள்ளார்
இதுகுறித்து அவர் கூறும்போது : ஸ்ருதிஹாசனுடன் பணிபுரிவதற்கு எந்த ஒரு ஒப்பனைக் கலைஞரும் மறுப்பு தெரிவிக்கவே மாட்டார். அந்த அளவுக்கு ஸ்ருதி என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பவர். அதனால் தான் சலார் படத்தில் அவர் படப்பிடிப்பு தளத்திற்கு வரும் முதல் நாள் வரை அவர் எந்த வகையான உடைகளை அணிய போகிறார், அவருக்கு எந்தவிதமான கெட்டப் மாற்றம் செய்ய இருக்கிறோம் என்பது பற்றி எல்லாம் அவருக்கு தெரியாது. படப்பிடிப்பின்போது அவருக்கு கெட்டப்பில் நிறைய மாற்றம் செய்த போது ஆச்சரியப்பட்டுப் போனார். பர்ஸ்ட் லுக் வெளிவரும்போது ரசிகர்களுக்கும் இந்த ஆச்சரியம் தொற்றிக்கொள்ளும் என கூறியுள்ளார்.