பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? |

யு டியூப் பயன்பாடு இளைஞர்களிடம் அதிகரித்ததைத் தொடர்ந்து சினிமா பாடல்கள் அல்லாமல் தனியிசைப் பாடல்களும் ரசிகர்களைக் கவர ஆரம்பித்துள்ளன. அந்த விதத்தில் அறிவு, தீ இருவரும் இணைந்து பாடிய வீடியோ ஆல்பமான 'எஞ்சாமி' பாடல் யு டியூபில் பெரிய வெற்றியையும், வரவேற்பையும் பெற்றது. 324 மில்லியன் பார்வைகளை அது யு டியூபில் கடந்துள்ளது.
இதனிடையே, இப்பாடலின் பிரபலத்தில் அறிவு இருட்டடிக்கப்படுகிறார் என்ற சர்ச்சை கடந்த சில வாரங்களாக எழுந்தது. அறிவுக்கு ஆதரவாக இயக்குனர் பா.ரஞ்சித் குரல் கொடுத்ததும் மேலும் பரபரப்பாக அமைந்தது. அதன்பின் அந்தப் பாடலைத் தயாரித்த மாஜா அதற்கு விளக்கத்தைக் கொடுத்தது.
இருப்பினும் அதை வேறுவிதமாக ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் முயற்சித்திருக்கிறார் போலிருக்கிறது. இன்று பிறந்தநாள் கொண்டாடும் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா நேற்று பிறந்தநாள் பார்ட்டி ஒன்றை வைத்துள்ளார். அதில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
அப்போது 'எஞ்சாமி' பாடகர்களான அறிவு, தீ ஆகியோருடன் தனுஷ் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். அதை தனுஷ் அவரது டுவிட்டர் தளத்தில் “எஞ்சாமிக்களுடன், ஒரு பில்லியனில் பாதி புகைப்படம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் பதிவை ரிடுவீட் செய்துள்ள சந்தோஷ் நாராயணன், புகைப்படத்தை எடுத்தது தான்தான் என்று தெரிவித்துள்ளார்.