ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது இருவரும் 15 நிமிடங்கள் அமர்ந்து உரையாடினார். அப்போது உதயநிதி ஸ்டாலின் உடன் இருந்தார்.
இந்த சந்திப்பு குறித்து சிரஞ்சீவி தனது டுவிட்டரில் எழுதியிருப்பதாவது: சிறப்பான பணிகளுக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை வாழ்த்துவதற்காக சந்தித்தேன். அவரை சந்தித்ததில் மகிழ்ச்சி, அவர் சிறப்பான ஆட்சி நடத்தி மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறார். கட்சிபாகுபாடின்றி அனைவரையும் அரவணைத்துச் செல்கிறார். தொலைநோக்கு பார்வை, அர்ப்பணிப்பு குணத்தால் மக்களின் தலைவராக இருக்கிறார், கொரோன காலத்திலும் சிறப்பான நிர்வாகத்தை தந்து வருகிறார். என்று எழுதியிருக்கிறார்.