இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை நமீதா. அதனைத்தொடர்ந்து, அவர் பல தமிழ் திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். அதன் பிறகு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் வந்தார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளிவந்த பிறகு நடிகர் வீரேந்திர சவுத்ரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.சமீபத்தில் நடிகை நமீதா பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.
சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் மும்பையில் தன்னுடைய தாய் தந்தையருடன் இருந்தபோது தன்னுடைய 17 வயதில் நடத்திய முதல் போட்டோ ஷூட் புகைப்படம் இது என்றும் 2000 ஆம் புகைப்படம் நடிகர் பூமான் இரானி எடுத்த இந்த புகைப்படங்கள் மூலமாகத்தான் 2001ஆம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் தேர்வானதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்.