தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான சுதீப் தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி படங்களிலும் நடித்து பிரபல நடிகராக வலம் வருகிறார். நான் ஈ, பாகுபலி, புலி போன்ற படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் இவர் பிரபலமாக உள்ளார்.
சுதீப் தனது அறக்கட்டளை மூலம் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும், ஏழை, எளியோருக்கும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். நடிப்பதோடு நிறுத்தி விடாமல், இதுபோன்ற சமூக சேவைகளின் ஈடுபடுவது மூலம் ரசிகர்கள் மனதில் அளவுக்கு அதிகமான அன்பை பெற்றுள்ளார். இந்த நிலையில் நடிகர் சுதீப் தனது 50வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். இதையொட்டி, அவரது ரசிகர்கள் கர்நாடக மாநிலம் முழுவதும் உற்சாகமாக பிறந்தநாளை கொண்டாடினர்.
பெல்லாரி மாவட்டம் சந்தூர் என்ற கிராமத்தில் சுதீப் ரசிகர்கள் நூற்றுக்கணக்கானோர் ஒன்று கூடி கட்அவுட் வைத்து பிரம்மாண்டமாக பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சில ரசிகர்கள் அங்கு எருமை மாட்டை அழைத்து வந்து, அதை பலியிட்டு அந்த ரத்தத்தை கட்அவுட் மீது தெளித்து வழிபாடு நடத்தினர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எருமை மாடு ஒன்றை நிறுத்தி சுதீப், வாழ்க என்ற குரல் எழுப்பியவாறு மாட்டின் தலையை அரிவாளால் துண்டித்தனர்.
பின்னர் ரத்தத்தை எடுத்து சுதீப் கட்-அவுட் மீது தெளித்து வழிபாடு நடத்தினர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த நிகழ்வு, கன்னட சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பெல்லாரி நகர் காவல் நிலையத்தில் சுதீப் ரசிகர்கள் 25 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.