தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வரும் விக்ரம் படத்தில் விஜய்சேதுபதி, பஹத் பாசில் என முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிக்கின்றனர். இதேப்போல சின்னத்திரை பிரபலங்கலாக இருந்த ஷிவானி, மைனா நந்தினி, விஜே மகேஸ்வரி என கலர்புல்லான நட்சத்திரங்களும் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளனர். கமலுக்கு இந்த படத்தில் ஜோடி இருக்கிறதா இல்லையா என்பது தெரியாத நிலையில், இந்த மூவருமே வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. ஷிவானியும், மைனா நந்தினியும் தாங்கள் இந்த படத்தில் நடிப்பதை ஏற்கனவே உறுதி செய்த நிலையில், தற்போது வி.ஜே மகேஸ்வரியும் இந்த படத்தின் படப்பிடிப்பில் தான் நடித்து வருவதை உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த படத்தில் வாய்ப்பு கிடைத்த அனுபவத்தையும் படப்பிடிப்பில் கலந்துகொண்ட அனுபவத்தையும் பற்றி மகேஸ்வரி கூறும்போது, ‛‛கமல் சார் அலுவலகத்திலிருந்து என்னை நடிப்பதற்காக அழைத்தபோது யாரோ சும்மா விளையாடுகிறார்கள் என நினைத்தேன். ஆனால் நேரில் சென்ற போதுதான் அது நிஜம் என்பதை தெரிந்து கொண்டேன், எந்த ஆடிசனும் வைக்கவில்லை. என்னுடைய கதாபாத்திரம் என்ன என்பதை கூட படப்பிடிப்பிற்கு சென்றபோது தான் தெரிந்து கொண்டேன். என்னுடைய காட்சிகள் பெரும்பாலும் விஜய் சேதுபதியுடன் தான் உள்ளது, படப்பிடிப்பில் அவர் எனக்கு நிறைய உதவினார். ஒரு நடிப்பு பள்ளியில் புதிதாக சேர்ந்தது போன்ற உணர்வுதான் எனக்கு ஏற்பட்டது'' என்று கூறியுள்ளார் மகேஸ்வரி.