திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
ஷங்கர் இயக்கத்தில் தமன் இசையமைப்பில் ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி மற்றும் பலர் நடிக்கும் தெலுங்குப் படம் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆரம்பமானது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதக் கடைசியில் இருந்து ஆரம்பமாகும் எனத் தெரிகிறது. இதனிடையே, இப்படம் பற்றிய சில தகவல் வெளியாகி உள்ளது.
இப்படத்தில் 10 கோடி ரூபாய் செலவில் ஒரு ரயில் சண்டைக் காட்சியை பிரம்மாண்டமாய் படமாக்க உள்ளார்களாம். அதில் மட்டும் 100 ஸ்டன்ட் கலைஞர்கள் பங்கேற்க உள்ளதாகவும், அவர்களுடன் ராம்சரண் சண்டையிடுவது போலவும் படத்தில் காட்சி வைத்துள்ளார்களாம். இதுவரை இப்படி ஒரு சண்டைக்காட்சி வரவில்லை என்று சொல்லுமளவிற்கு அந்தக் காட்சியைப் படமாக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளார் என்கிறார்கள்.
படம் ஆரம்பித்து வெளிவருவதற்குள் இப்படியான பல பில்ட்-அப்கள் தொடர்ந்து வரும் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.