தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

சென்னையை சேர்ந்த இளைஞர் எபின் ஆண்டனி. இவருக்கு நடிப்பில் ஆர்வம் அதிகமாக இருந்த காரணத்தினால் கல்லூரியில் படிக்கும் போதே நூறுக்கும் மேற்பட்ட தமிழ் , ஆங்கில படங்களுக்கும், கார்ட்டூன் படங்களுக்கும் குரல் கொடுத்து வந்தார். அதுவே இவருக்கு சினிமாவில் பிரவேசிக்க முதல் படியாக அமைத்தது.
மேல் படிப்புக்காக அமெரிக்கா சென்றவர், தன் நடிப்பு திறனை அதிகரிக்க , லாஸ் ஏஞ்சல்சிலுள்ள நியூயார்க் பிலிம் அகாடமியில் நடிப்பு கற்று கொண்டார். தற்சமயம் லியானார்டோ டிகாப்ரியோ போன்ற ஆஸ்கார், எமி விருது பெற்ற பிரபலங்களின் ஆக்டிங் கோச் லாரி மோஸ், டிம் பிலிப்ஸ் ஆகியோரிடமும் நடிப்பு கற்று வருகிறார்.
சமீபத்தில் அமெரிக்காவில் அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியான டேனில் ரான்சம் எழுதி இயக்கிய ஸ்போக்கன் என்ற ஹாரர் படத்தில் நடிகராக அறிமுகமாகியுள்ளார். இதில் அவர் இசை கலைஞனாக நடித்துள்ளார்.
எபின் நடித்த இரண்டாவது ஆங்கில படம் பட்டர் ப்ளைஸ் இந்த வருடம் வெளிவர உள்ளது. ஹாலிவுட் படங்களின் நடிக்க வாய்ப்புகள் கிடைத்து வரும் வேளையில் தனக்கு தமிழ் மற்றும் தென்னிந்திய மொழி படங்களில் நடிக்க வேண்டும் என்பது தான் ஆசையும் லட்சியமும் என்கிறார் எபின் ஆன்டனி.