'பாகுபலி தி எபிக்' படத்தின் டீசர் ஆகஸ்ட் 14ல் வெளியாகிறது! | ''வீட்ல நான் காலில் விழணும்'': அஜித் | காதல் கிசுகிசு எதிரொலி: கிரிக்கெட் வீரர் முகமது சிராஜிக்கு ராக்கி கட்டிய பாடகி ஜனாய் போஸ்லே! | 175 கோடியை கடந்த முதல் இந்திய அனிமேஷன் படம் மகாஅவதார் நரசிம்மா! | சம்பளத்தை உயர்த்தினாரா சூரி ? | விதியை மதிக்க மறுத்த அல்லு அர்ஜுன்: ரசிகர்கள் கண்டனம் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: ஓட்டுப்பதிவு விறுவிறு | பிளாஷ்பேக்: இசைத்தட்டில் இடம் பெறாத எம் கே தியாகராஜ பாகவதரின் பாடல்களும், “சிந்தாமணி” திரைப்படமும் | மாஸ் இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா! | கேரளா டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் 'கூலி' |
கொரோனா ஊரடங்கு தளர்வுகளின் ஒரு பகுதியாக தியேட்டர்கள் திறக்கப்பட்ட பிறகு மக்களும் தியேட்டருக்கு வரவில்லை. மக்களை தியேட்டரை நோக்கி இழுக்கும் அளவிற்கான படங்களும் வெளிவரவில்லை. இந்த நிலையில் கடந்த 17ந் தேதி வெளியான கோடியில் ஒருவன் படத்தின் வெற்றி விழாவை கொண்டாடியது படக்குழு.
இந்த விழாவில் விஜய் ஆண்டனி பேசியதாவது: இந்த விழாவின் நாயகன் உண்மையாகவே ஆனந்த கிருஷ்ணன் தான். எந்தப்படம் ஜெயிச்சாலும் அதற்கு காரணம் இயக்குனர்தான். இந்தப் படம் மட்டுமல்ல நான் நடித்த அனைத்து படத்திற்குமே இது பொருந்தும். இயக்குனர்கள் அட்லி ,லோகேஷ் கனகராஜ் போல ஆனந்த கிருஷ்ணனும் விஜய் ,அஜித் போன்றவர்களை வைத்து படம் இயக்க வேண்டும். அதற்கு தேவையான அனைத்து தகுதியும் அவருக்கு இருக்கிறது. என் மேல் நம்பிக்கை வைத்து இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ராஜாவுக்கு நன்றி. இந்த கோடியில் ஒருவன் படத்தின் வெற்றி அதில் பணிபுரிந்த அனைவருக்கும் கிடைத்த வெற்றி. என்றார்.