செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
மதுரையே சேர்ந்த வடிவேலுவின் குலதெய்வ கோவில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகில் உள்ள காட்டுபரமக்குடியில் உள்ளது. இங்கு அருள்பாலிக்கும் திருவேட்டரை அய்யனார்தான் வடிவேலுவின் குல தெய்வம். ஒவ்வொரு ஆண்டும் வடிவேலு இங்கு குடும்பத்துடன் வந்து வழிபடுவது வழக்கம்.
இந்த கோவிலுக்கு சொந்தமான இடம் ஒன்று திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சேத்தூர் கிராமத்தில் உள்ளது. சுமார் 5 கோடி மதிப்பிலான 25 ஏக்கர் நிலம் அது. இந்த நிலத்தை மீட்டுத்தருமாறு குலதெய்வ வழிபாட்டு பக்தர்கள் அறநிலையத்துறையிடம் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து அறநிலையத்துறை அதிகாரிகள் அந்த இடத்தை ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கோவில் நிலத்தை மீட்டனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டசபை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை வடிவேலு சந்தித்த பிறகே இந்த மீட்பு நடவடிக்கை துரிதமாக எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.