நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
2022ம் ஆண்டு இந்திய திரையுலகத்தைப் பொறுத்தவரை இனிமையான ஆண்டாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் பெரிய படங்கள் சில வெளியாக உள்ளன.
தமிழைப் பொறுத்தவரையில் 2022ம் ஆண்டு பொங்கலுக்கு அஜித் நடிக்கும் 'வலிமை' படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற படங்களைப் பற்றிய அறிவிப்புகளும் இந்த மாதத்தில் எதிர்பார்க்கப்படுகின்றன.
இதனிடையே, தெலுங்கில் பொங்கலுக்கு சில முக்கிய படங்களை வெளியிட அதன் தயாரிப்பாளர்கள் தயாராக இருந்தனர். இப்போது அந்தப் போட்டியில் 'ஆர்ஆர்ஆர்' படமும் நுழைய உள்ளதால் மற்ற படங்கள் போட்டியிலிருந்து விலக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
பிரபாஸ் நடிக்கும் 'ராதே ஷ்யாம்' படம் ஏற்கெனவே பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. அக்டோபர் 13ம் தேதி வெளியாவதாக இருந்த 'ஆர்ஆர்ஆர்' படம் இப்போது நேரடியாக 'ராதே ஷ்யாம்' படத்துடன் போட்டியிட உள்ளதாகத் தெரிகிறது.
இந்த இரண்டு பெரிய படங்களும் வருவதால் பொங்கலுக்கு வெளியிட திட்டமிடப்பட்டிருந்த மற்ற தெலுங்குப் படங்களான மகேஷ் பாபு நடிக்கும் 'சர்க்காரு வாரி பாட்டா', சிரஞ்சீவி நடிக்கும் 'ஆச்சார்யா', பவன் கல்யாண் நடிக்கும் 'பீம்ல நாயக்' ஆகிய படங்களின் வெளியீட்டை தள்ளி வைக்க வேண்டியுள்ளது.
'ஆர்ஆர்ஆர்' படத்தின் இந்த மாற்றத்தால் மற்ற படங்களின் தயாரிப்பாளர்கள் கோபத்திற்கு ஆளாகியுள்ளதாகத் தெரிகிறது.