நடிகையின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின் | அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் |
சிவகார்த்திகேயன் மற்றும் நெல்சன் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் 'டாக்டர்'. இப்படத்தில் கதாநாயகியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். வரும் அக்டோபர் 9-ம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், இரண்டு ஆண்டு கழித்து உங்களை சந்திப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எனக்கு பாட்டு எழுதும் நம்பிக்கை இல்லை. ஆனால் நெல்சன்தான் அவரது முதல் படத்தில் ஆரம்பித்து வைத்தார். இப்படத்தில் செல்லம்மா பாடல் எளிதாகவும், ஓ பேபி பாடல் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. இந்த படத்தில் எனக்கு டயலாக்கே இல்லை. மொத்தமே பத்து டயலாக்தான். எல்லோரும் பேசும்போது நான் பேசாமல் இருந்தது கஷ்டமாக இருந்தது. ஆனால் அதன்பிறகுதான் நெல்சன் என்னை எப்படி நடிக்க வைத்திருக்கிறார் என்று புரிந்தது.
உன்னாலே உன்னாலே படத்திலிருந்தே வினய்யை எனக்கு ரொம்ப பிடிக்கும். நான்தான் இருக்கிறதிலேயே உயரம் என்று நினைத்திருந்தேன். ஆனால் மனுஷன் என்னைவிட உயரமாக இருக்கிறார். அதனால் நடிக்கும்போது ஆப்பிள் பாக்ஸ் போட்டுதான் நின்றேன். வினய்யின் தோன்றமும், குரலும், இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம். படப்பிடிப்பின்போது தமிழ் தெரிந்த பிரியங்காவுடன் நடித்தபோது காட்சி எப்படி வந்திருக்கும் என்ற தெளிவு இருந்தது. மற்றபடி ரெடின், யோகிபாபு நடிப்பு நன்றாக இருந்தது. விஜய் கார்திக் ஒளிப்பதிவு படத்தின் அட்டகாசமாக வந்துள்ளது, அதை திரையரங்கில் பார்த்தால் தெரியும். அனிரூத் தான் இந்த படத்தை அறிவித்ததிலிருந்தே, அடையாளமாக இருந்தார். டாக்டர் படம் அனைவருக்கும் பிடித்தமான படமாக இருக்கும் என்று தெரிவித்தார்.