டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பவர் கீர்த்தி சுரேஷ். தமிழில் 'அண்ணாத்த, சாணி காயிதம்' ஆகிய படங்களில் நடித்து முடித்துவிட்டார். தெலுங்கில் மகேஷ் பாபு ஜோடியாக 'சர்க்காரு வாரி பாட்டா' படத்தில் நடித்து வருகிறார்.
கொரோனா அலைகளின் காரணமாக பல சினிமா பிரபலங்கள் எந்த வெளிநாட்டிற்கும் சுற்றுலா பயணத்தை மேற்கொள்ள முடியாத நிலையில் இருந்தார்கள். ஆனாலும், பல நடிகைகள் பக்கத்தில் உள்ள மாலத் தீவிற்குச் சென்று வந்தார்கள். அங்கிருந்து விதவிதமான புகைப்படங்களைப் பதிவிட்டு ரசிகர்களை தங்கள் அழகால் அதிசயிக்க வைத்தார்கள்.
கீர்த்தி சுரேஷ் இப்போது தன்னுடைய விடுமுறைக்காக ஸ்பெயின் பறந்துள்ளார். அதன் புகைப்படம், வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டு, “நான் இப்போது விடுமுறையில், ஒவ்வொரு நாளும் தான், ஏனென்றால் நான் எனது தொழிலை நேசிக்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
'சர்க்காரு வாரி பாட்டா' படத்தின் படப்பிடிப்பிற்காகத்தான் கீர்த்தி தற்போது ஸ்பெயின் சென்றுள்ளார். இப்படம் அடுத்த வருட பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.