தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தமிழ் படங்களில் நடித்து வரும் நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி. போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் விடுதலையாகி இருக்கிறார். வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த நிலையில், பெங்களூரு இந்திராநகரில் இருந்து நேற்று முன்தினம் காலையில் வாடகை காரில் ராஜராஜேசுவரிநகரில் நடந்து வரும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்றார். அப்போது காரில் ஏ.சி. போடும் விவகாரம் தொடா்பாக சஞ்சனாவுக்கும், டிரைவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இதில் டிரைவரை சஞ்சனா தகாத வார்த்தையில் திட்டியதாக தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ராஜராஜேசுவரிநகர் போலீஸ் நிலையத்தில் நடிகை சஞ்சனா மீது டிரைவர் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் சஞ்சனாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக சஞ்சனா கூறியிருப்பதாவது: என்னிடம் சொந்தமாக கார் இல்லை. சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைக்கவில்லை. என்னிடம் பணமும் இல்லை. அதனால் தான் வாடகை காரில் சென்றேன். ஒரு சினிமா படப்பிடிப்பில் கலந்து கொள்ள ராஜராஜேசுவரி நகருக்கு சென்றேன். ராஜராஜேசுவரிநகருக்கு செல்வதற்கு பதிலாக கெங்கேரி நோக்கி கார் சென்றது.
கார் வேறு பாதையில் சென்றதால், என்னை கடத்தி செல்வதாக உணர்ந்தேன். அதுபற்றி மட்டுமே டிரைவரிடம் கேட்டு தகராறு செய்தேன். அவரை தகாத வார்த்தையில் திட்டவில்லை. இந்த விவகாரத்தில் நான் எந்த ஒரு தவறும் செய்யவில்லை. என் மீது டிரைவர் போலீசில் புகார் அளித்துள்ளார். எனது தரப்பு நியாயம் பற்றி போலீசாரிடம் தெரிவிப்பேன். என்றார்.