நாளை வெளியாகும் ‛குபேரா' படத்தின் டிரைலர் | ‛கூலி' படத்தின் தெலுங்கு வியாபாரம் தொடங்கியது | அல்லு அர்ஜுன் - திரிவிக்ரம் சீனிவாஸ் படம் டிராப் ? | அல்லு அர்ஜுன் - அட்லி படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் | படப்பிடிப்பை முடித்த விஷ்ணு விஷால், ராம்குமார் | வினோத் தயாரிப்பில் பிக்பாஸ் ராஜூ? | வெற்றியைப் பதிவு செய்வாரா 'படை தலைவன்' ? | பிளாஷ்பேக்: “எதிர் நீச்சல்” செய்து வென்று காட்டிய இயக்குநர் கே பாலசந்தர் | படத்தை பார்க்காமலேயே மறைந்த ஷிஹான் ஹுசைனி | '3BHK' படத்தில் நடித்தபோதுதான் சொந்த வீடு வாங்கினேன்: சித்தார்த் |
வெற்றிமாறன் தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். போலீசாக சூரியும் அவரது தந்தையாக விஜய் சேதுபதியும் நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் இயக்குனர் என்றழைக்கப்படும் கவுதம் மேனன், வெற்றிமாறனின் 'விடுதலை' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் அவர் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. சூரியின் உயர் அதிகாரியாக கவுதம் மேனன் நடிக்கிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நடிக்கும் முதல் படம் இதுவாகும். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.