தமிழுக்கு வரும் நரிவேட்ட ஹீரோயின் | கவுரவ டாக்டர் பட்டம்: அட்லிக்கு வாழ்த்து சொன்ன அல்லு அர்ஜுன் | குடியிருந்த கோயில், அவ்வை சண்முகி, போர் தொழில் - ஞாயிறு திரைப்படங்கள் | திருமணமா...? வதந்திகளை பரப்பாதீர்கள் : அனிருத் | சூர்யாவின் 'டிராப் இயக்குனர்கள்' பட்டியலில் இணைகிறாரா வெற்றிமாறன்? | ஓடிடியில் அதிக தொகைக்கு விற்பனையான அனுஷ்காவின் காட்டி | இயக்குனர் அட்லிக்கு கவுரவ டாக்டர் பட்டம் | பறந்து போ படத்தில் யுவன் இல்லாதது ஏன்? ராம் விளக்கம் | கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றமா? | பிளாஷ்பேக்: பாரதிராஜா கைவிட்ட 'பச்சைக்கொடி' |
மலையாள திரை உலகில் இளம் நடிகர்களில் முன்னணி வரிசையில் இருப்பவர் நிவின்பாலி. அதேசமயம் தமிழில் ரிச்சி என்கிற படத்தில் நேரடியாக அறிமுகமானாலும் அந்த படம் அவருக்கு கைகொடுக்கவில்லை. இந்த நிலையில் சில வருட இடைவெளிக்குப் பிறகு இயக்குனர் ராம் டைரக்சனில் மீண்டும் நேரடி தமிழ் படம் ஒன்றில் நடித்து வருகிறார் நிவின்பாலி. கதாநாயகியாக அஞ்சலி நடிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ராமேஸ்வரம் அருகிலுள்ள தனுஷ்கோடியில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று இயக்குனர் ராம் மற்றும் நிவின்பாலி இருவருக்குமே பிறந்த நாள். ஒரு படப்பிடிப்பில் இயக்குனரும் ஹீரோவும் ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடுவது என்பது ஆச்சரியமான விஷயம் தான். அந்த வகையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிவின்பாலி மற்றும் இயக்குனர் ராமுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்.