மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
விஜய் டிவி சீரியல்களுக்கு சின்னத்திரை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருவது தெரிந்த விஷயமே. ஆனால், எல்லா சமயத்திலும் எல்லா சீரியலும் ஹிட் ஆவதில்லை. சில சீரியல்களுக்கு மட்டுமே ரசிகர்கள் கூட்டம் உள்ளது. சமீபத்தில் சில விஜய் டிவி சீரியல்களில் சில எண்ட் கார்டு போட்டு முடித்து வைக்கப்பட்டன. அந்த வகையில் தற்போது சோஷியல் மீடியாவில் பெரிய அளவில் கவனம் பெறாத விஜய் டிவியின் 'வேலைக்காரன்' தொடர் விரைவில் முடிவுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வேலைக்காரன் தொடரில் சபரி மற்றும் கோமதி பிரியா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஆரம்பம் முதலே இந்த சீரியல் முத்து படத்தை அப்படியே காப்பி அடித்து வைத்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில் மதியம் 2 முதல் 2:30 மணி வரை ஒளிபரப்பாகும் இந்த சீரியலுக்கு பெரிய அளவில் பார்வையாளர்களும் இல்லை. எனவே, இந்த சீரியல் மிக விரைவில் முடிவுக்கு வரவுள்ளதாக சின்னத்திரை வட்டாரங்கள் பேசி வருகின்றனர்.