துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலின் மூலம் தமிழ் ரசிகர்களின் வீட்டில் செல்ல கண்ணம்மாவாக வலம் வந்தவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன். நன்றாக சென்று கொண்டிருந்த சீரியலில் இருந்து ரோஷினி திடீரென விலகினார். இதற்கு காரணம் மிகச்சிறந்த இரண்டு வாய்ப்புகளை தவறவிட்ட ரோஷினி மூன்றாம் வாய்ப்பையும் தவறவிடக்கூடாது என்று நினைத்துதான் பாரதி கண்ணம்மா தொடரை விட்டு விலகியுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சமீபத்தில் வெளிவந்த தமிழ் படங்களில் கதாநாயகிகளின் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த திரைப்படங்கள் 'சார்பட்டா பரம்பரை' மற்றும் 'ஜெய்பீம்'. சார்பட்டா பரம்பரை படத்தில் துஷாரா விஜயன் நடித்த மாரியம்மாள் கதாபாத்திரமும், ஜெய்பீம் படத்தில் லிஜோமோல் ஜோஸ் நடித்த செங்கேனி கதாபாத்திரமும் நல்ல வரவேற்பை பெற்றன. அதுவரை தமிழில் இவர்கள் படங்கள் நடித்திருந்தாலும் கூட, இந்த படங்கள் தான் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இவர்களை உச்சத்திற்கு கொண்டு சென்றன.
ஆனால், உண்மையில் இந்த இரண்டு வாய்ப்புகளும் நம் கண்ணம்மா ரோஷினிக்கு தான் முதலில் வந்துள்ளது. சீரியலில் கவனம் செலுத்தி நடித்தன் காரணமாக ரோஷினியால் இந்த இரண்டு வெற்றி படங்களிலும் நடிக்க முடியவில்லை. ஆனால், படங்கள் வெளியாகி வெற்றி பெற்ற பின் மிகவும் வருந்தியுள்ளார். எனவே, தான் இனியும் வெள்ளித்திரை வாய்ப்பை விட்டுவிடக்கூடாது என விடாமல் பிடித்துக் கொண்டு அதில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இதனால் தான் பாரதி கண்ணம்மா தொடரிலிருந்து ரோஷினி விலகியுள்ளார். இந்த தகவலை பிரபல விஜய் டிவி இயக்குனர் பிரவீன் பென்னட் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.