தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

தமிழ் திரையுலகின் நவீன கவர்ச்சி கன்னியாக வலம் வந்த யாஷிகா, விஜய் டிவியின் பிக்பாஸ் 3 நிகழ்ச்சிக்கு பிறகு மேலும் பிரபலமானார். அவருக்கு பலரும் ரசிகர்களாக உள்ளனர். ஆனால், கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட விபத்தில் யாஷிகா உயிர் பிழைத்து வந்ததே பெரிய விஷயமாக போயிற்று. பல நாட்கள் சிகிச்சையில் இருந்து நடக்கவே மிகவும் சிரமப்பட்டார். இதனால் அவரது ரசிகர்கள் அனைவரும் மனம் வருத்தமடைந்து சோக கீதங்களை பாடி வந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில், பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ப்ரீஸ் டாஸ்க்கில் நிரூப் நந்தக்குமாரை பார்ப்பதற்கு பிக்பாஸ் வீட்டிற்குள் யாஷிகா வந்திருந்தார். அந்த சம்பவம் நிரூப்பிற்கு மட்டுமல்லாமல் அவரது ரசிகர்கள் பலருக்கும் இன்ப அதிர்ச்சியை கொடுத்தது.
தற்போது அவர் தனது கம்பேக்கை தெரிவிக்கும் வகையில் மீண்டும் ஹாட்டான போட்டோஷூட்களில் களமிறங்கியுள்ளார். சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதையடுத்து, தங்கள் தலைவி ரிட்டன் வந்துவிட்டதாக யாஷிகாவின் வருகையை ரசிகர்கள் செலிபிரேட் செய்து வருகின்றனர்.