சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

சின்னத்திரை தொகுப்பாளினி அர்ச்சனா மற்றும் அவரது மகள் சாரா, சமீபத்தில் வெளியான 'டாக்டர்' படத்தில் நடித்து அசத்தியிருந்தனர். தற்போது சாராவுக்கு ரசிகர் கூட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் விஜய் டிவியின் புதிய நிகழ்ச்சியான 'தாயில்லாமல் நானில்லை' என்ற நிகழ்ச்சியை அர்ச்சனாவும், சாராவும் இணைந்து தொகுத்து வழங்குகின்றனர். இன்று (ஜனவரி 30) முதல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது.
இதற்கிடையில் நிகழ்ச்சியின் புரோமோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதை பார்க்கும் சிலர் அர்ச்சனா மற்றும் சாராவை கிண்டலடிக்கும் வகையில் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். இதனால் கடுப்பான சாரா தனது சமூக வலைதளப் பக்கத்தில் காட்டமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'எல்லோருக்கும் வணக்கம். எங்களை வெறுப்பவர்களுக்கான சிறு குறிப்பு. ஒரு டிவி நிகழ்ச்சி வீடியோவின் கமெண்டுகளில் எங்கள் மீதான அதிகமான வெறுப்புணர்ச்சி வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அதிலும் பெண்களே எங்களை அதிக அளவில் திட்டுகிறார்கள். ஏன் என்று புரியவில்லை. வெறுப்பவர்களை எண்டர்டெயின் செய்ய எங்களுக்கு விருப்பமில்லை. உங்கள் கருத்தை உங்களுடனேயே வைத்துக்கொள்ளுங்கள். எங்களுக்கு ஆதரவு தரும் அனைவருக்கும் நன்றி' என கூறியுள்ளார். அவரது பதிவிற்கு விஜய் டிவியின் திவ்யதர்ஷினி உட்பட செலிபிரேட்டிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.