இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கு கென்ன வேலி தொடரில், ப்ரியங்கா குமார், சுவாமிநாதன் அனந்தராமன், ஜோதி ராய், அக்ஷிதா அசோக் ஆகியோர் நடித்து வருகின்றனர். கடந்த ஒருவருட காலத்தில் அதிகமான நடிகர்கள் ஒரு தொடரை விட்டு வெளியேறியுள்ளனர் என்றால் அது காற்றுக்கென்ன வேலி தான். ஹீரோயின் ப்ரியங்கா குமாரும், வில்லி அக்ஷிதா அசோக் மட்டும் தான் இதுவரை மாறவில்லை. பல முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர் வெளியேறி வருவதுடன், சில காதாபாத்திரங்கள் முடித்தும் வைக்கப்படுகின்றன.
அந்த வகையில் புலி ராகவேந்திரன் இந்த தொடரில் மாறன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஆனால், சமீபகாலமாக இந்த கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. மேலும், மாறன் கதாபாத்திரம் விரைவில் தொடரிலிருந்து நீக்கப்படும் என்பதையும் புலி ராகவேந்திரன் உருக்கத்துடன் கூறி வீடியோ வெளியிட்டிருந்தார். இதனை தொடர்ந்து நடிப்புக்கு முழுக்கு போட்டு வேறு வேலை பார்க்கப்போவதாகவும் மாறன் கூறியிருந்தார்.
மாறன் சீரியலை விட்டு விலகுவது பலருக்கும் வருத்தமாக உள்ளது. இந்நிலையில் சகநடிகை மற்றும் தோழியுமான ப்ரியங்கா குமாருக்கு மாறன், தொடரை விட்டு நீங்கும் முன் அழகான கரடி பொம்மை ஒன்றை புலி ராகவேந்திரன் பரிசாக கொடுத்துள்ளார். அதன் புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.