பராசக்தி படத்தை வெளியிட தடையில்லை : நீதிமன்றம் உத்தரவு | பத்து நாள் ராஜாவாக சதீஷ் | சிறிய படங்களின் பிரச்னைகள் தீருமா? | ஜனநாயகன் டிரைலர் நாளை(ஜன., 3) வெளியீடு | புத்தாண்டை முன்னிட்டு எத்தனை படங்களின் அப்டேட் வந்தது தெரியுமா ? | தியேட்டர்களை எதிர்த்து ஓடிடியில் வெளியான 'சல்லியர்கள்' | தெலுங்குக்கு முன்னுரிமை தரும் நயன்தாரா | 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! |

விஜய் டிவியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்ட தொடர் 'வைதேகி காத்திருந்தால்'. பிரஜின் ஹீரோவாகவும், சரண்யா துராடி ஹீரோயினாகவும் நடித்து வந்த இந்த தொடர் எதிர்பாராத விதமாக தொடங்கிய வேகத்திலேயே முடித்து வைக்கப்பட்டது. இதனால் மனமுடைந்த சரண்யா துராடி வருத்தத்துடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். ஆனால், அவர் அதே விஜய் டிவியில் தற்போது மற்றொரு தொடரில் என்ட்ரியாகியுள்ளார்.
செந்தில் - மோனிஷா நடிக்கும் 'நாம் இருவர் நமக்கு இருவர்' போலீஸ் கதாபாத்திரத்தில் சரண்யா நடிக்க ஆரம்பித்துள்ளார். அவர் நடிக்கும் கதாபாத்திரம் கெஸ்ட் ரோல் என தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் கண் கலங்கி நின்றவரை விஜய் டிவி கை கொடுத்து தூக்கிவிட்டதாக பலரும் பாராட்டி வருகின்றனர். சரண்யா துராடி நடிக்கும் இந்த கெஸ்ட் ரோல், கேரக்டர் ரோலாக மாற்றப்பட வேண்டும் எனவும் அவரது ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.