2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

சின்னத்திரை பிரபலங்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டு விளையாடி வரும் கலகலப்பான நிகழ்ச்சி 'சூப்பர் டாடி'. ஞாயிறு தோறும் ஒளிபரப்பாகி வந்த இந்நிகழ்ச்சியில் ராமர், மதுரை முத்து, வேல்முருகன், வினோத் உள்ளிட்ட பலரும் தங்கள் குழந்தைகளுடன் கலந்துகொண்டு விளையாடி வந்தனர்.
இந்நிகழ்ச்சியின் இறுதிபோட்டி நேற்று நடைபெற்று முடிந்தது. இதில், பிரபல நடிகரான கிங் காங் மற்றும் அவரது மகன் துரை முருகன் முதலிடத்தை பிடித்து வின்னர் டைட்டிலை வென்றனர். அவர்களுக்கு பரிசுத்தொகையாக ரூ. 3 லட்சம் வழங்கப்பட்டது. ரன்னர் பட்டத்தை வினோத் மற்றும் மகள் திரிஷிகா வென்றனர். அவர்களுக்கு ரூ. 1.5 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
மூன்றாவது இடத்தை 'என்னம்மா' ராமரும் அவரது மகள் ஐஸ்வர்யாவும் , நான்காவது இடத்தை மதுரை முத்து மற்றும் மகள் யாழினி, ஐந்தாவது இடத்தை கொட்டாச்சி மற்றும் மகள் மானஸ்வி ஆகியோர் பிடித்துள்ளனர். பல நாட்களுக்கு பிறகு சின்னத்திரையில் மீண்டும் நுழைந்து சிறப்பாக விளையாடி டைட்டில் பட்டத்தை வென்ற நடிகர் கிங் காங்கிற்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.