கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் |

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் வெங்கட் நடித்து வருகிறார். இந்த தொடரில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தார் திறக்கவிருந்த புதிய மளிகை கடையை திறக்கவிடாமல் சிலர் சதி செய்கின்றனர். பல போராட்டங்களுக்கு மத்தியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரதர்ஸ் கடையை மீட்டு திறக்கின்றனர். இந்த சந்தோஷமான நிகழ்வை கொண்டாடும் விதத்தில் ஜீவா என்ற கதாபாத்திரம் மது அருந்துவதோடு, வீட்டில் சென்று ரகளை செய்கிறது. இந்த எபிசோடு செம காமெடியாக சென்றதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததுடன் அதில் நடித்த வெங்கட்டையும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், அந்த அளவுக்கு எதார்த்தமாக நடித்த வெங்கட்டை நீங்கள் உண்மையாகவே குடிச்சீங்களா? என பலரும் கேள்வி கேட்டு வந்தனர். அவர்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் அந்த காட்சி உருவாக்கப்பட்ட விதத்தை வீடியோவாக வெங்கட் வெளியிட்டுள்ளார். மேலும் அதில், நான் ஒரு டீ டோட்டலர். சைட் டிஸ் மட்டுமே சாப்பிடுவேன். அந்த காட்சிக்காக கண்களை தேய்த்து தேய்த்து நடித்தேன். இதனால் கண் வலி வந்தது. ஆனாலும், அது வொர்த் தான் என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் அனைவரும் வெங்கட்டின் நடிப்பை புகழ்ந்து பாராட்டி வருகின்றனர்.