தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

விஜய் டிவியின் ஹிட் தொடர்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் விரைவில் முடிவடைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அந்த தொடரின் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கூட்டுக் குடும்ப வாழ்க்கையை மையப்படுத்திய இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், குமரன் தங்கராஜன், சரவண விக்ரம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். பேமிலி ஆடியன்ஸ் மத்தியில் இந்த தொடர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த தொடர் நிறைவுபெற உள்ளதாக செய்திகள் வெளியாகியது. ஆனால், உண்மையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் முடிவுக்கு வரவில்லை. இதன் தெலுங்கு வெர்சனான வதினம்மா என்ற தொடர் தான் முடிவுக்கு வருகிறது. வதினம்மா தொடரிலும் தனம் (தெலுங்கில் சீதா) கதாபாத்திரத்தில் சுஜிதா தான் நடிக்கிறார் என்பதால் தான் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டில் தெலுங்கில் வதினம்மா என்ற பெயரில் வெளிவந்த இந்த தொடர், 595 எபிசோடுகளை கடந்துள்ளது. எனினும், தெலுங்கு மக்களிடையே இந்த தொடர் போதிய வரவேற்பை பெறாத நிலையில் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
தமிழில் 2018ம் ஆண்டு ஒளிபரப்ப தொடங்கிய 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடர் 820 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.