10 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் தெறி | கிராமத்து கெட்டப்பில் வெளியான ஐஸ்வர்யா ராஜேஷின் ‛ஓ சுகுமாரி' முதல் பார்வை | கவர்ச்சி நடனம் ஆடிய ரஜிஷா விஜயன் | ஜனவரி 22ல் மலையாள திரையுலகம் வேலை நிறுத்தம் | அமிதாப் பச்சனை பார்க்க ஷாப்பிங் மாலில் நடந்த தள்ளுமுள்ளுவில் கண்ணாடி உடைப்பு : ரசிகர்கள் காயம் | சஞ்சய் தத்தை உண்மையிலேயே ஏமாற்றியது லியோவா ? ராஜா சாப்பா ? | பொங்கல் வெளியீட்டில் குதித்த ‛வா வாத்தியார்' | பொங்கலுக்கு மேலும் சில படங்கள் ரிலீஸ் | தமிழில் தடுமாற்றத்தில் 'தி ராஜா சாப்' | 'பராசக்தி'யில் இருக்கும் 'புறநானூறு'.... |

பிக்பாஸ் சீசன் 5-ல் விளையாடிய போட்டியாளர்களில் மிகவும் நெருங்கிய நண்பர்கள் என்றால் அது அக்ஷராவும், வருணும் தான். இருவரும் காதலிக்கிறார்களோ என பார்ப்பவர்கள் சந்தேகிக்கும் வகையில் நெருக்கமான நண்பர்களாக இருந்து வருகின்றனர். இந்நிலையில், அக்ஷரா வருணை கண்டிப்பாக பழிவாங்குவேன் என கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வருணும், அக்ஷராவும் சமீபத்தில் சந்தித்து கொண்ட போது வருண், அக்ஷரா மீது கலரை பூசி விளையாடியிருக்கிறார். அந்த கறை அக்ஷராவின் தலையிலும், காஸ்ட்லியான காரிலும் ஒட்டிக்கொண்டது. எவ்வளவு கழுவினாலும் அந்த கறை போகவில்லை. இதனால் வருண் மீது கோபம் கொண்ட அக்ஷரா, 'எனக்கு வீணா போன ஒரு ப்ரண்ட் இருக்கான். அவன் பேரு வருண். சும்மா இருந்தவள வாக்கிங் போலாம்னு கூட்டிட்டு போயிட்டு கலரை பூசிட்டான். போகவே மாட்டேங்குது. வருண் நான் உன்னை சும்மா விடமாட்டேன். ஐ ஹேட் யூ. கண்டிப்பா உன்னை பழி வாங்குவேன்' என அதில் பேசுகிறார்.
அத்துடன் வருண் கலர் பூசிய வீடியோவை வடிவேல் காமெடியுடன் மீம் வீடியோவாக இணைத்து வெளியிட்டுள்ளார். பார்ப்பதற்கு செம காமெடியாக இருக்கும் அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.