சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்களில் ஒருவர் சுஜா வருணி. இவருக்கும் சிவாஜி கணேசனின் பேரனான சிவாஜி தேவ் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த தம்பதியினருக்கு அத்வைத் என்ற மகன் உள்ளார். தற்போது தனது மகன் அத்வைத்திற்காக சில புத்தகங்களை வாங்கியுள்ள சுஜா வருணி அதிலிருந்து ஆத்திச்சூடி புத்தகத்தை முதலில் எடுத்து தமிழ் சொல்லிக் கொடுக்கிறார். அதன்பின் தமிழ் கடவுளான முருகனை அறிமுகம் செய்கிறார்.
இதன் வீடியோவை பகிர்ந்துள்ள சுஜா வருணி, 'என்னங்க? தமிழ் சொல்லிக்கொடுக்கிறேன் பாக்குறீங்களா. தமிழ் தாங்க முதல்ல. இங்கிலீஸ் அப்புறம் மத்த மொழிகள குழந்தைங்க ஸ்கூலுக்கு போய் படிச்சிப்பாங்க. ஆனா, நாம நம்ம தாய் மொழிய விட்டுக் கொடுக்கவே கூடாது' என கூறியுள்ளார். இப்படி அருமையான செயலை செய்துள்ள சுஜா வருணியை பலரும் தற்போது பாராட்டி வருகின்றனர்.