5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் |
பெண்களை மையப்படுத்தி உருவாகியுள்ள கயல் தொடரில், வாழ்க்கையில் பல பிரச்னைகளில் எதிர்நீச்சல் போட்டு சாதித்துக்காட்டும் கயல் என்கிற நடுத்தர குடும்பத்தின் பெண்ணின் கதை சொல்லப்படுகிறது. இதில் ஹீரோயினாக சைத்ரா ரெட்டி நடிப்பில் அசத்தி வருகிறார். சைத்ரா ரெட்டி ஏற்கனவே சின்னத்திரை விருது நிகழ்ச்சிகளில் சிறந்த நடிகைக்கான விருதுகளை வென்றுள்ளார்.
இந்நிலையில், தொலைக்காட்சிகளுக்காக நடத்தப்படும் விருது நிகழ்ச்சியிலும் சிறந்த நடிகைக்கான விருதை மீண்டும் ஒருமுறை வென்றுள்ளார். இதன் மூலம் சைத்ரா ரெட்டி இந்த ஆண்டில் மட்டும் 'கயல்' தொடருக்காக மூன்று முறை சிறந்த நடிகைக்கான விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து சைத்ரா ரெட்டிக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.