வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

'வானத்தைப் போல' தொடருக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த தொடரில் முதன் முதலில் ஹீரோ மற்றும் தங்கை ரோலில் நடித்து வந்த தமன் குமார், ஸ்வேதா கெல்கே திடீரென அடுத்தடுத்து சீரியலை விட்டு விலகினர். தற்போது அந்த ரோல்களில் ஸ்ரீகுமார் மற்றும் மான்யா நடித்து வருகின்றனர். ஹீரோ சின்னராசுவின் திருமணத்தை வைத்து சீரியல் டிஆர்பியும் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், பொன்னி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த ப்ரீத்தி குமார் சீரியலை விட்டு விலகியுள்ளார். இத்துடன் இந்த சீரியலில் நடித்த மூன்று முக்கிய நடிகர்கள் சீரியலை விட்டு வெளியேறி விட்டனர். அவர் விலகியதற்கான காரணம் சரிவர தெரியாத நிலையில், சாந்தினி பிரகாஷ் இனி பொன்னியாக தொடர்வார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன.
சாந்தினி பிரகாஷூம் நல்ல நடிகை தான் ஆனால், பொன்னி கேரக்டருக்கு ப்ரீத்தி குமார் நல்ல பொருத்தமாக இருந்தார் என சீரியல் நேயர்கள் புலம்பி வருகின்றனர். ஸ்ரீகுமார், மான்யாவை போல சாந்தினியும் கேரக்டரை பிடித்துக்கொள்வாரா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.