துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'தென்றல் வந்து என்னைத் தொடும்' சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் பவித்ரா ஜனனி ஹீரோயினாக நடித்து வருகிறார். முன்னதாக 'ஈரமான ரோஜாவே' தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரை நேயர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பவித்ராவுக்கு ஏராளமான இளைஞர்கள் ரசிகர்களாக உள்ளனர். இதனால் அவர் வெளியிடும் இன்ஸ்டா போஸ்ட்டுகளுக்கு லைக்ஸ் எகிறுகிறது.
விஜய் டிவி பிரபலங்கள் பலரும் கார்டிலியா என்ற பிரம்மாண்டமான சொகுசு கப்பலில் சுற்றுலா சென்று போட்டோக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் சேர்ந்து கொண்ட பவித்ரா கவர்ச்சியான மினி ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு கப்பல் முன் நின்று க்யூட்டாக போஸ் கொடுத்துள்ளார். மேலும் சுற்றுலாவின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரலாகி வருகிறது.