தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

வெள்ளித்திரை நடிகையான அபிதா, சின்னத்திரையிலும் 'திருமதி செல்வம்' தொடரின் மூலம் தடம் பதித்தார். பாலாவின் 'சேது' படத்தில் நடித்ததன் மூலம் அக்ரஹாரத்து அழகு தேவதையாக தமிழ் ரசிகர்கள் நெஞ்சில் பதிந்தார். இருப்பினும் தொடர்ந்து பெரிதாக படங்கள் எதுவும் நடிக்கவில்லை. இதற்கான காரணத்தை ரசிகர்கள் பலரும் முன்னரே எழுப்பி வந்தனர். அதற்கெல்லாம் அபிதா சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிலளித்துள்ளார்.
அந்த பேட்டியில் அபிதா, ‛‛சேது படத்தில் நடனம் ஆடுவது போல ஒரு சீன் ஷூட் பண்ணாங்க. அதுல எனக்கு நடனம் ஆட வரல. இதனால், கோபமடைந்த பாலா ஷூட்டிங் ஸ்பாட்டில எல்லார் முன்னாடியும் திட்டினார். அதுக்கு அப்புறம் அம்மாக்கிட்ட இந்த படத்தில நடிக்கமாட்டேன்னு சொன்னேன். அப்புறம் சமாதானம் ஆகி மறுநாள் பாலாகிட்ட மன்னிப்பு கேட்டேன், அவரும் உங்க நல்லதுக்காக தான் சொன்னேன்னு சொன்னார். படம் வெளிய வர்றது வர எந்த படத்திலயும் நடிக்க வேண்டாம்னு சொன்னார். ஆனா, என்னோட சூழ்நிலைக்காக அடுத்து சில படங்கள் நடிச்சேன். இதனால் அவருக்கு கோபம் என நினைக்கிறேன். படத்தோட ரிலீஸ் அப்போ பிரஸ் மீட்டுக்கு கூட என்ன கூப்பிடல. சேது படத்துக்காக நானும் என்னோட கடின உழைப்ப கொடுத்திருக்கேன். அதன்பின் சினிமாவை விட சீரியல் தான் நமக்கு சரிபட்டு வரும் என்று சினிமாவ விட்டே ஒதுங்கிட்டேன்'' என கூறியுள்ளார்.