கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! |
விஜய் டிவியின் சூப்பர் ஹிட் காமெடி கலக்கல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 3 அண்மையில் முடிவுக்கு வந்தது. இறுதிபோட்டியில் ஸ்ருதிகா டைட்டில் பட்டத்தை தட்டிச் செல்ல, தர்ஷன் மற்றும் அபிராமி ரன்னர்-அப் பட்டத்தை பெற்றுள்ளனர். இந்நிகழ்ச்சியின் போது ஜெயித்தவர்களுக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற சில பிரபலங்களுக்கும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. அந்த வகையில் கோமாளியாக அசத்திய புகழுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசுத்தொகையை வழங்கினர். அதை வாங்கிய புகழ், 'நான் எப்போதாவது தான் நிகழ்ச்சிக்கு வருகிறேன். எனவே இந்த தொகையை பாலாவுக்கு கொடுக்கிறேன்' என விட்டுக்கொடுத்தார். ஏழைக்குழந்தைகளின் கல்வி செலவுக்காக உதவி வரும் பாலா, அந்த பணத்தை குழந்தைகளுக்காக தரப்போவதாக அறிவித்தார். உடனேயே ஸ்ருதிகா தனது 5 லட்ச ரூபாய் பரிசுத்தொகையிலிருந்து 1 லட்ச ரூபாயை பாலாவுக்கு தருகிறேன் என்றார். புகழ் மற்றும் ஸ்ருதிகா வழங்கிய பணத்துடன் தனக்கு தனிப்பட்ட முறையில் கிடைத்த 1 லட்ச ரூபாய் பணத்தையும் பாலா பெரம்பூரில் இருக்கும் ஆதரவற்ற பெண் குழந்தைகளின் படிப்பிற்காக வழங்குவதாக மேடையிலேயே அறிவித்தார். குக் வித் கோமாளி சீசன் 3 ஃபைனலில் வெற்றி பெற்றது ஸ்ருதிகாவாக இருந்தாலும் பாலா நேயர்கள் அனைவரது மனதையும் கவர்ந்து நல்லதொரு இடத்தை பிடித்துவிட்டார்.