ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் |

தமிழ் சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரச்சிதா மஹாலெட்சுமி. விஜய் டிவியுடனான கருத்து வேறுபாட்டின் காரணமாக அந்த சேனலை விட்டு விலகிய அவர், கலர்ஸ் தமிழ் சேனலில் 'இது சொல்ல மறந்த கதை' என்ற தொடரில் ஹீரோயினாக நடித்து வந்தார். இந்த தொடரும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ஹிட் தொடர்கள் பட்டியலில் இடம்பெற்றது.
இந்நிலையில், ஹிந்தியில் இரண்டு சீசன்களாக 370 எபிசோடுகள் ஒளிபரப்பாகியுள்ள இந்த தொடரானது தற்போது தமிழில் வெறும் சுமார் 150 எபிசோடுகளுக்குள்ளாகவே முடித்து வைக்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் ஒருபுறம் வருத்தமடைந்துள்ளனர். மற்றொருபுறம் இந்த சீரியலின் கதாநாயகி ரச்சிதா மஹாலெட்சுமி விரக்தியில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
அவர் தனது பதிவுகளில், 'இந்த சீரியலில் நடிக்க வேண்டாம் என நண்பர்கள் சொல்லியபோது அவர்களை எதிர்த்து பதிலடி கொடுத்து தான் இந்த சீரியலில் நடிக்க ஆரம்பித்தேன். இப்போது அவர்கள் சொல்லியது உண்மை என்று ஆகிவிட்டது. நன்றாக சென்று கொண்டிருக்கும் சீரியலை தேவையில்லாமல் முடித்து வைத்துவிட்டார்கள். இனிமேல் இவர்கள் செய்யும் போலியான புரோமோஷன்களில் இருந்து ப்ரீயாக இருக்கலாம். நீங்க செஞ்ச வரைக்கும் போதும். நன்றி! வாழ்த்துகள்' என்று வரிசையாக போஸ்ட் போட்டு தனது வருத்தத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.