துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
பிக்பாஸ் சீசன் 6 விரைவில் தொடங்கவுள்ளது. இந்த முறை பிக்பாஸ் வீட்டில் நுழையும் போட்டியாளர்கள் யார் என்ற உத்தேச பட்டியலும் இணையத்தில் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இந்நிலையில், முந்தையை பிக்பாஸ் சீசன்களில் பல அப்டேட்டுகளை கொடுத்து வந்த பாத்திமா பாபு, இம்முறை பிக்பாஸ் 6 போட்டியாளர் ஒருவரின் பெயரையும் வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள பாத்திமா பாபு, 'பிக்பாஸ் 6 போட்டியாளர்கள் பட்டியல் என பல பெயர்களை வெளியிட்டுள்ளார்கள். அதில், ஒருவர் பெயரை நான் சொல்கிறேன். கண்டிப்பாக அவர் பிக்பாஸ் வீட்டில் நுழைவார். அவர் பிரபல் சீரியல் நடிகை ஆயிஷா தான். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சத்யா சீரியலில் நடித்து வருகிறார். இம்முறை ஆயிஷா போட்டியாளர்களில் ஒருவராக பிக்பாஸ் வீட்டில் நிச்சயம் இருப்பார்' என்று பாத்திமா பாபு அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
அதற்கேற்றார் போல் ஆயிஷா நடித்து வரும் சத்யா 2 சீரியலின் க்ளைமாக்ஸூம் மிக விரைவில் வெளியாக உள்ளது. இதை ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனமே அதிகார்ப்பூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சீரியல் ரெளடி பேபி ஆயிஷாவின் பிக்பாஸ் என்ட்ரி எப்படி இருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.