மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் | மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய தனுஷ் | அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? |
சூப்பர் சிங்கர் புகழ் ராஜலெட்சுமி சினிமாவில் பாடகியாக என்ட்ரி கொடுத்து அசத்தி வந்த நிலையில், தற்போது 'லைசென்ஸ்' என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாகவும் அறிமுகமாகியுள்ளார். இதனையடுத்து ராஜலெட்சுமியை சோஷியல் மீடியாவில் அதிக ரசிகர்கள் பின்தொடர ஆரம்பித்துள்ளனர். அவரும் அவ்வப்போது லைவ், ரீல்ஸ் வீடியோக்களின் மூல அப்டேட் கொடுத்து வருகிறார். அந்த வகையில் அண்மையில் வீடியோ ஒன்றை வெளியிடுள்ள ராஜலெட்சுமி தன் ரசிகர்களுக்கு 'எது லவ் எது க்ரஷ்' என அட்வைஸ் கொடுத்துள்ளார்.
எது லவ் எது க்ரஷ் என விளக்கிச் சொல்லும் ராஜலெட்சுமி, 'நமக்கு ஒருத்தர் மேல் க்ரஷ் வந்துட்டா அவங்க யாரு? பெரியவங்களா? சின்னவங்களா? நல்லவங்களா? கெட்டவங்களா? என்ன மொழி பேசுவாங்கன்னு எதுவுமே தேவையில்லங்க. அவங்கள பார்த்த உடனே பாசிட்டிவா வைப் ஆகும். அவங்க பக்கத்துல இருந்தாலோ, அவங்க வாய்ஸ் கேட்டாலோ ரொம்ப சந்தோஷமா இருக்கும். அதுக்கு பேரு தான் க்ரஷ்.
ஆனா, லைப் லாங் கூடவே வர்ற லவ்வுக்கும் இந்த க்ரஷுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கு. லவ் பன்ற பர்சனுக்கு நம்ம கனவு என்னனாச்சும் தெரிஞ்சிருக்கும். நம்ம குறைய ஏத்துக்குற பக்குவம் இருக்கும். முக்கியமான நேரத்துல கூடவே இருக்கும். அதனால, ஒருத்தர் மேல நமக்கு க்ரஷ் வந்துச்சுனா அத லவ்வுன்னு நினைச்சு கமிட்டாகாதீங்க. அதேமாதிரி, ஒருத்தர் மேல லவ்வு வந்தாலும், அத க்ரஷ்னு நினைச்சிட்டு நீங்களே உங்கள ஏமாத்திகாதீங்க. கொஞ்சம் டைம் எடுத்து யோசிங்க' என மிக எளிமையாக கூறியுள்ளார்.