இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
ஜாக்கி ஷெராப், ப்ரியாமணி, சன்னி லியோன் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம் 'கொட்டேஷன் கேங்'. மிக விரைவில் வெளியாகவுள்ள இந்த படத்தின் போஸ்டர் லுக் மற்றும் டீசர் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த படத்தில் ஜீ தமிழ் தொடர்களில் நடித்து பிரபலமான அக்ஷயா கிம்மியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாவில் மூஞ்சில் ரத்தக்கறையுடன் வெறித்தனமாக போஸ் கொடுக்கும் அந்த படத்தின் போஸ்டர் லுக்கை பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படமானது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அக்ஷயா கிம்மியின் சினிமா என்ட்ரிக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக அக்ஷயா இயக்குநர் பாலா இயக்கத்தில் 'தாரை தப்பட்டை' படத்திலும் கரகாட்டக்காரி வேடத்தில் சூப்பராக ஆடி அசத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அக்ஷயா கிம்மிக்கு இந்த படம் ஒரு திருப்புமுனையாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.