ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
‛செம்பருத்தி' தொடரின் மூலம் சின்னத்திரை நேயர்களுக்கு பரிட்சயமானவர் நடிகை பத்ரா நாயுடு. 2020ம் ஆண்டு இவருக்கு திருமணம் நடந்தது. செம்பருத்தி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இவர் கர்ப்பமானார். அப்போது கொரோனா காலக்கட்டம் என்பதாலும், சீரியலில் பிசியாக நடித்து வந்ததாலும் உடம்பை சரிவர கவனிக்காததால் பரதா நாயுடுவுக்கு அபார்ஷன் ஆனது. அந்த சோகத்திலிருந்து மீண்டு வந்த பரதா நாயுடு தாலாட்டு தொடரிலும், ஜீ தமிழில் ரெட்டை ரோஜா தொடரிலும் நடித்து வந்தார்.
இந்நிலையில் பரதாநாயுடு மீண்டும் கருவுற்றிருந்த நிலையில், தாலாட்டு சீரியல் குழுவினர் அவரை சீரியலை விட்டு நீக்கியுள்ளனர். இதுகுறித்து அண்மையில் பேசியுள்ள பரதாநாயுடு, 'ரெட்டை ரோஜா தொடரில் போலீஸ் கதாபாத்திரம் என்பதால் அந்த சீரியலை விட்டு விலகதான் முதலில் முடிவு செய்திருந்தேன். கர்ப்பமாக இருப்பதை சொன்னால் தாலாட்டு சீரியல் குழுவினர் உதவியாக நடந்து கொள்வார்கள் என்று நினைத்தேன். ஆனால், கர்ப்பமாக இருக்கிறேன் என்று சொன்ன பத்து நாட்களில் தாலாட்டு சீரியலிலிருந்து என் கதாபாத்திரத்தையே நீக்கிவிட்டனர். கடைசியில் எந்த சீரியலை விட்டு விலக நினைத்தேனோ அந்த ரெட்டை ரோஜா சீரியல் குழுவினர் தான் என்னை நன்றாக பார்த்துக்கொண்டனர்' என்று கூறியுள்ளார். 8 மாதம் வரை சீரியலில் நடித்து வந்த பரதாநாயுடுக்கு அண்மையில் வளைகாப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. தற்போது 9 மாத நிறைமாத கர்ப்பினியாக இருக்கும் அவருக்கு விரைவில் குழந்தை பிறக்கவுள்ளது.